Powered By Blogger

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

உண்மையில் யார் "சத்ரியர்கள்" ?? ஒரு தெளிவான அலசல்

உண்மையில்  யார் "சத்ரியர்கள்" ?? ஒரு தெளிவான அலசல்


சத்ரியர்கள்  என்ற வார்த்தயை மையப்படுத்தி  குறிப்பாக தமிழகத்தில் பல விதமான செய்திகள் உலாவுகின்றன,சிலர் இது குறிப்பிட்ட ஒரு ஜாதியின் வரலாற்று  வார்த்தையாகவும் பெருமைபடுத்துகின்றனர் ...உண்மையில்  சத்ரியர்கள்  யார் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் 
கிமு 2000 வாக்கில் வட இந்தியாவில்  "முன்  வேத காலம்" முடிந்து "பின் வேத காலம்" தொடங்கியது, அப்பொழுது மக்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டனர், பிரம்மனின் தலையில் பிறந்தவர்கள் பிராமணர்கள், பிரம்மணின் தோலில் பிறந்தவர்கள் சத்ரியர்கள்,பிரம்மனின் இடுப்பில் பிறந்தவர்கள் வைசியர்கள், இவர்கள் மூவருவரும் ஆரிய வர்த்ததின் உயர்ந்த பிரிவுகள் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத மக்கள் பிரம்மனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது வட இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டது.
இரண்டாம் பிரிவான சத்ரியர்களே ஆள்பவர்கள, சத்ரியர்களுக்கு ஆலோசனை குல குருவாக பிராமணர்கள் இருப்பார்கள், இவ்வாறு கி.மு 1000 ல் வட இந்தியா 16 மகாஜன பதங்களாக பறந்து விரிந்து இருந்தது, இது தற்போதைய ஈரான் தொடக்கம் வரையிலும், ஆப்கானிஸ்தான் முடிவு வரையிலும் பரந்து விரிந்து இருந்தது. தற்போதைய ஆப்கானிஸ்தான்தான் காந்தாரம் வரை
 1)அங்கம் 2)மகதம் 3)காசி 4)கோசலம் 5)வஜ்ஜி 6)மல்லம் 7)மத்சயம் 8)அவந்தி 9)சேதி 10)வத்சயம் 11)அஸ்மகம் 12)பாஞ்சாலம் 13)குரு 14)சூரசேனம் 15)காந்தாரம் 16) காம்போஜம் என்று பதினாறு மகாஜனபதங்களாக பிரித்து ஆண்டார்கள், இவர்கள் தங்களை தீயில் இருந்து பிறந்ததாக நம்பினார்கள், இந்த பதினாறு மகாஜன பதங்களின் ஆங்கில உச்சரிப்பு வேறு,, (இந்திய மொழிப் பெயர்கள் வேறு எனவே தாங்கள் ஆங்கில உச்சரிப்புகளை பயன்படுத்த வேண்டாம்)

இந்த பதினாறு மகாஜன பதங்களில் மகதம் மட்டுமே மிக பெரிய பலமான அரசாக இருந்தது, அதை கைப்பற்றி ஆட்சி செய்பவர் எல்லா பகுதியையும் கைப்பற்றி தலை நகராக வைத்துக் கொள்வார்கள்,, இப்படி மகத பேரரசை நந்த மரபு ஆண்டு, பின் மௌரிய மரபு ஆண்டு, சுங்கர்கள் குஷானர்கள் சாதவாகனர்கள் ஆண்டு, குப்தர்கள் கைக்கு வந்து கிமு 600 வரை ஒட்டு மொத்த வட இந்தியாவும் ஆளப்பட்டது.அவை ஒவ்வொரு மரபையும் பற்றி பேசினால் ஒரு வாரமாகும். வட இந்தியாவில் அந்த சமயத்தில் அனைத்து சத்ரியர்களும் சாதரணமக்களும் பௌத்தம் சமணத்தை தழுவிய காலமது, அப்படி தழுவினாலும் கிமு 600 க்கு முன்னே 16 மகாஜனபத ஆட்சியாளர்கள் பல லச்சக்கணக்கான சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள், பௌத்தம் சமணத்துக்கு மாரினாலும் பௌத்த கோவில்களும் சமண கோவில்களும் ஆயிரக்கணக்கில் கட்டினார்கள். பின் கிபி 600 ல் மகத்தை ஆண்ட குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்த பொழுது,, பௌத்தமும், சமணமும் சைவ வைணவத்திற்க்குள் கொண்டு வந்து அழிந்தது. சைவ வைணவ இந்து ஆட்சியாளர்களாக மீண்டும் அந்த பகுதி சத்ரியர்கள் எழுந்தார்கள் சுதந்திர ஆட்சியாரளர்கள் ஆனார்கள். அவர்கள் ராஜ புத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் அவர்ளின் பெண்கள் மிகவும் மிகவும் அழகானவர்கள் நிறமானவர்கள். இன்னும் பல ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினார்கள், தற்போதைய பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதியில் 7000 சிவ விஷ்ணு ஆலயங்கள் இருந்ததாக அரேபிய கவிஞர் குறிப்பிடுகிறார், சிந்து நதிக்கரை முழுவதும் கோவில்கள் கட்டப்பட்டது. தற்போதைய ராஜஸ்தான் குஜராத் பஞ்சாப், காஷ்மீர்,உத்ரணகண்ட்,உத்ரஞ்சல்,உத்ரபிரதேஷ் மத்திய பிரதேசம்,பீகார்,வங்கம் ஒரிசா,வட கிழக்கு மானிலங்கள் சிக்கிம் அசாம்,மேகலாயா என்று பல லச்சகணக்கான கோவில்கள் கலை நயமிக்க பிரமாண்டமாக கட்டப்பட்டது, அரசுகள் தங்கள் செல்வங்களை கோவில்களில் வைத்து பாதுகாத்தனர். தென்னிந்தியாவிலும் சாதவாகனர்களின் பிற்கால சந்ததிகள் பல்லவர்கள் கற்க்கலில் கோவில் கட்டும் முறைகளையும் கோவில் கட்டும் முறைகளையும் வடக்கிலிருந்து வரும் பொழுது அவர்களுடன் கொண்டு வந்தார்கள்,, ஏன் என்றால் தமிழர்களுக்கு கோவில் கட்டும் பழக்கம் இல்லை திறந்த வெளி கோட்டங்களும் நடுகல்களுமே வணங்கப்பட்டது. இதனாலேயே தென்னிந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவில்கள் இருக்கும் இருந்தாலும் அவை அனைத்தும் தமிழர் கட்டிய கோவில்கள் அல்ல தஞ்சை பெரிய கோவிலை தவிற மற்ற இன்றய தமிழக பெரிய கோவில்கள் 90% விஜய நகர ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள். நாம் தமிழகத்தில் பார்க்கும் அனைத்து கோவில்களும். சரி வடக்கே செல்வோம் வடக்கே பல ஆயிரக்கணக்கான கோவில்கள் கட்டி ஆட்சியளர்கள் வளப்படுத்திய பொழுது , கிமு 7 ம் நூற்றாண்டில் அரேபியர்கள் படையெடுப்பு பல ஆயிரம் முறை நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தானத்திலும் சிந்து சமவெளியிலும் இருந்த பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன செதில் செதிலாக இடித்து பொக்கிசங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போதைய ஆப்கானிஸ்தான் அன்றை நமது காந்தாராம் முழுவதுமாக அழிந்து இசுலாமிய வேறுபட்ட நாடானது நமது பரதகண்டத்தை விட்டு பிரிந்தது.
அடுத்து சிந்து சமவெளியின் மேற்க்கு பகுதி முழுவதுமாக அரேபியர்கள் வசம் போனது அடுத்து சிந்து நதியின் கிழக்கே உள்ள பகுதிகளை கொள்ளையடிக்க நுழைந்தனர் அரேபயர்கள் நொண்டு தைமூர் வந்து கொள்ளையடித்துச் சென்றான் கிபி800 களில் பல ஆயிரம் கோவில்களை இடித்து விட்டுச் சென்றான் அதற்க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிக பெரிய செல்வ களஞ்சியமான ராஜஸ்தானில் இருந்த சோம நாதபுரம் (சோம்நாத்) கோவில் இந்தியாவிலேயே எந்த தொடர்பும் இல்லாமல் கல்லால் ஆன லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் கோவில் பல ராஜ புத்திரர்களின் கலை பொக்கிசமாக விளங்கய சோமநாத புர கோவிலை கொள்ளையடிக்க கஜினி முகமது 16 முறை படையெடுத்து தோல்வியடைந்தான் இறுதியில் வெற்றி பெற்று இந்தியாவின் கலை பொக்கிசம் சுக்கு நூறாக உடைத்து எரியப்பட்டு, கொள்ளையடக்கப்பட்டது. பின் மிஞ்சிய ராஜ புத்திரர்கள் மக்களே வாழாத மத்திய பிரதேச காடுகளுக்குள் கஜிராகோ,உஜ்ஜயினி போன்ற இடங்களில் 1000 கிலோ மீட்டர்களில் பல ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டி பொக்கிசங்களை மறைத்து வைத்தனர்,
பின் அரேபிய படையெடுப்பாளர்கள் தங்கள் ஆட்சி பகுதியாக மாற்றி மீண்டும் வட இந்தியா முழுவதும் ஆட்சி செய்ய நுழைந்தார்கள் ராஜபுத்திரர்களின் பிரிந்து கிடுக்கும் தன்மையை அறிந்து பிரித்து விட்டு ஆள தொடங்கினார்கள் இதனால் வேதங்கள் தோன்றிய புண்ணிய பூமி என்று அழைக்ப்பட்ட உத்ரஞ்சில்தான் ஏராளமான சிவன் கோவில்கள் அதிகம் கங்கை சமவெளியில் சொல்லவே வேண்டாம் எல்லாம் கிமு 1500 வேத கால சிவ விஷ்ணு ஆலயங்கள் 8000 ம் பீகார் இந்தியாவின் கலை கட்டிக்கலையின் பொக்கிசம், ஆயிரக்கணக்கான சிவ ஆலயங்கள், ஆயிரக்கணக்கான விஷ்ணு ஆலயங்கள், ஆயிரக்கணக்கான புத்த கோவில்கள், ஆயிரணக்கான சமண கோவில்கள் நிறைந்தது பீகார், உத்திர பிரதேசம்தான் சொல்லவே வேண்டாமே கங்கை ஆற்று படுகையில் சிவன்,விஷ்ணு,ராமன்,கிருஷ்ணன் என்று பல ஆயிரணக்காண கோவில்கள் கட்டப்பட்டது. காஷ்மீரில் பல சிவன் சக்தி கோவில்கள் கட்டப்பட்டது, ராஜஸ்தானில் சொல்லவே வேண்டாம். அங்கு சிவன் விஷ்ணு சமண பெளத்த கோவில்கள் ஏரளமாக ராஜபுத்திரர்கள் கட்டினார்கள்,, குஜராத்தை பற்றி சொல்லவே வேண்டாம் அங்கு சமண சமயத்தின் பிறப்பிடம் பல ஆயிரக்கணக்கான சமண தீர்த்தங்கர்கள் கோவில்கள் சிவ விஷ்ணு ஆலயங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டது. கிபி 1000 ல் ராஜ ராஜ சோழன் ஒரு கோவிலை கட்டும்போது, குஜராத்தில் ஒரு விதவை ராணி ‪‎உதயமதி‬ தனது கணவருக்காக பல கிமீ பூகிக்கு கீழே கிணற்று வடிவில் மிக பிரமாண்டமாய் கட்டினால் அது வியப்பின் சரித்திர குறியீடு,, பெண்ணுக்காக ஆண் கட்டிய நினைவு சின்னம் தாஜ்மகால், ஒரு பெண் ஆணுக்காக கட்டிய நினைவு சின்னம் ராணி கீ வாவ்  600 ஆண்டுகள் பழமையானது(https://en.wikipedia.org/wiki/Rani_ki_vav),, தாஜ்மகால் க்கு  600 ஆண்டுகளுக்கு முன்னே கட்டப்பட்டது,,

உதயமதி கணவருக்காக கட்டிய அந்த கிணற்று வடிவ நினைவு கலைநயமிக்க கட்டிடங்கள்




இங்கு ராஜ ராஜ சோழன் ஒரு கோவில் கட்டும் பொழுது,, வட மேற்க்கில் பல ஆயிரம் கோவில்கள் நிலங்களை பறி கொடுத்த ராஜ புத்திரர்கள் மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சி பகுதிகளில் தலை நகரில் கோவில்கள் கட்ட பயந்து, மக்கள் வாழாத கஜிராகோவி உஜயினில் வெறும் 80 ஆண்டுகளில் 300 பிரமாண்ட கோவில்கள் கட்டப்பட்டது,, தாங்கள் தலை நகரில் கட்டினால் படையெடுப்பாளர்கள் படையெடுப்பார்கள் என்று. தங்கள் ஆட்சி பகுதியில் மறைவான மக்கள் வாழாத தெரியாத பகுதிகளில் பல ஆயிரம் கோவில்களை கட்டினார்கள். வடக்கே இன்னும் பல அரேபியர்கள் பாரசீகர்கள் புகுந்து ஆட்சி செய்ய உத்திர பிரதேச கோவில்கள் இன்னும் ஏரளாமாக இடிக்கப்பட்டது,, இசுலாமிய ஆட்சியாளர்கள் இடிக்க,இந்து ஆட்சியாளர்கள் மீண்டும் கட்ட இடிக்க கட்ட இப்படி 1600 வெள்ளையர்கள் வரும் வரை தொடர்ந்தது,, பின் அந்த ராஜ புத்திர பெண்களுக்கு வருவோம்
அரேபியர்கள் குறிப்பாக ராஜபுத்திரரர்களின் பொண்ணுக்காகவும் பெண்ணுக்காகவுமே படையெடுத்தார்கள், உயரமான சிவப்பான கோதுமை நிறமான அழகு பதுமைகள் ராஜ புத்திர பெண்கள், தமது ராஜா போரில் தோற்று விற்றார் என்ற செய்தி கேட்டாலே ஜவ்கர் என்னும் தீயில் விழுந்து உயிர் விடுவார்கள், எல்லா அரண்மனைகளிலும் அந்த ஜவ்கர் அறை இருக்கும் தங்கள் அரசு போரில் தோற்று விட்டது என்று செய்து ஒற்றர்கள் மூலம் அறிந்த உடன் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் அந்த அறைக்குள் சென்று தங்களின் உடை அணிகரன்கள் ஆடம்பர பொருட்கள் என்று அனைத்தையும் வைத்து ஒரு அரண் அமைப்பர்கள் பெரிய போர் போல்,, வேயந்து,, தீ மூட்டுவார்கள் பின் ஒவ்வொருவராக "ஜெய்பவானி", என்று கூறிக்கொண்டே தீயில் விழுந்து இறந்து விடுவார்கள்,,
வடக்கே மேலே குறிப்பிடபட்டவர்கள் தான்  உண்மையான சத்ரியர்கள்,, 

இன்று தென்னிந்தியாவில் யாரை பார்த்தாலும் சத்ரியர் சத்திரயர் என்று போட்டுக்கொள்காறார்கள்....அவர்கள் கூறும் வரலாறுகளும் போலியானவைகள்

எழுதியவர் - க அழகர் www.facebook.com/samy.alagar.31
பதிவேற்றியது  - www.facebook.com/theo.raveth



3 கருத்துகள்:

  1. ஆமாம் அக்னி புத்திரர்களே ராஜா புத்திரர்கள்.கோத்திரத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.தமிழகத்தில் வாழும் வன்னியர்களே ராஜ புத்திரர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  2. உங்க கிட்ட எல்லாம் வன்னியன் ஷத்ரியனுனு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல , எங்கள் செயல்பாடுகள் தெரிவிக்கும் எங்களை சத்திரியர் என்று..கோபத்த கெலப்பாதிங்க யா

    பதிலளிநீக்கு